வெங்காயச் சாறு தேய்த்தால் முடி உதிராது என்பது உண்மையா? வாங்க தெரிந்து கொள்ளலாம்
இன்றைக்கு பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல், இதற்காக பலரும் செயற்கையான எண்ணெய்கள், க்ரீம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் பல விதமான இயற்கையான பொருட்களை கொண்டும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் வெங்காயம், வெங்காயச் சாறு தேய்த்தால் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இது உண்மை தானா? இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முடி உதிர்வது ஏன்?
முடி உதிர்வதற்கு தலையில் ஏற்படக்கூடிய வறட்சி, பொடுகு, உடலின் வெப்பநிலை அதிகமாக இருப்பது, சத்து குறைபாடு, கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது, பரம்பரை காரணங்கள் என பல காரணங்கள் உண்டு.
உங்களுக்கு முடி உதிர்கிறது என்றால் அது எதனால் என முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
வெங்காய சாறில் அப்படி என்ன இருக்கிறது?
வெங்காயத்தில் முடி ஆரோக்கியமாக வளர்வதற்கான சல்ஃபர் இயற்கையாகவே இருக்கிறது. இந்த சல்ஃபர் முடியின் வேர்களை வலுவாக மாற்றுவதால் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.
மேலும் வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் தன்மை உண்டு.
முடி உதிர்தல் மட்டுமின்றி பொடுகு, அரிப்பு, தொற்று மற்றும் இளநரை போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
வெங்காயத்தை பொடியாக நறுக்கி , அதனை அரைத்து, வடிக்கட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1:3 என்ற விகிதத்தில் சோற்றுக்கற்றாழை அல்லது தேய்ங்காய் எண்ணை கலந்து , தலையின் வேர் பகுதிகளில் படும்படி தேய்த்துக்கொள்ளவும்.1 மணி நேரம் ஊரவிட்டு தலையை ஷாம்பு அல்லாத இயற்கையான பொருட்களை கொண்டு அலச வேண்டும்.
1/4 கப் வெங்காயம் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பின் 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை ஷாம்பு போட்டு நன்றாக அலச வேண்டும். இந்த முறையை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கடைப்பிடித்து வர முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.