இனி ஆரஞ்சு தோலை தூக்கி ஏறியாதீங்க.. முகத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க! நல்ல பலனை தரும்
பொதுவாக நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் ஆரஞ்சு.
இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதனால் உடலில் உள்ள பல நோய்களை தீர்க்க உதவுகின்றது.
குறிப்பாக ஆரஞ்சு பழத்தை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதை விட ஆரஞ்சு தோல் பயன்படுத்துவது இன்னும் கூடுதலான பலன்களைக் கொடுக்கும்.
அதிலும் பொலிவிழந்த டல்லான சருமத்துக்கு தொடர்ச்சியாக ஆரஞ்சு தோலை பயன்படுத்தி வரும்போது சருமம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
தற்போது இதனை எப்படி பயன்படுத்து என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- ஆரஞ்சு தோல் பொடி - 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியைச் சேர்த்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுிக் கொள்ளுங்கள்.
பயன்கள்
இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கி முகம் பளிச்சென்று பொலிவாக மாறும்.