ஆரஞ்சு தோல் இருந்தால் போதும்...! வெள்ளை முடியை கருகருன்னு மாற்றலாம்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சில குறைப்பாட்டின் காரணமாக தலை முடியானது நரைத்துக்கொண்டு இருக்கும். அதை தடுப்பதற்காக சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அவை அனைத்தும் நிரந்தர தீர்வை ஒரு போதும் வழங்குவதில்லை.
அந்தவகையில் ஆரஞ்சு தோல் வைத்து எப்படி நரைத்த முடியை கருமையாக மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வெள்ளை முடியை நீக்க
ஆரஞ்சு பழத்தை உலர்த்தி அரைத்து அதில் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை உங்கள் தலைமுடியில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
அடுத்து ஆரஞ்சு தோல் பொடியுடன் தேன் கலந்து தலை முடியில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
பொடுகை நீக்க
தயிருடன் ஆரஞ்சு தோலைப் பொடியாகக் கலந்து தலை முடியில் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
பின் தண்ணீரில் கழுவினால் தலையில் பொடுகு நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |