முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள ஆசையா? இதோ சூப்பரான டிப்ஸ்
பூசணிக்காய் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை இரண்டும் சருமத்தில் ப்ரீ - ரேடிக்கல்ஸால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும்.
இது நல்ல சருமப் பொலிவைத் தரக்கூடிய ஒரு பொருள். அதனால் உங்களுடைய சருமப் பராமரிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அந்தவகையில் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள பூசணிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- பூசணிக்காய் - 1 துண்டு
- தேன் - 1 ஸ்பூன்
- மஞ்சள் - அரை ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
பூசணிக்காயை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
அப்படியே 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
இது சருமத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று முதல் பல்வேறு சருமப் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவுகிறது.