பொலிவான முகத்தை பெற பச்சை பாலில் இதை கலந்து பூசி பாருங்க..!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஓர் ஆசை இருக்கும்.
அதற்காக பல முறைகளையும் பின்பற்றுவார்கள். அதில் ஒன்று தான் பால். அதை வைத்து எப்படி முகத்தை பளபளக்க செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இதை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் பல மாற்றங்களும் ஏற்படும்.
ஒரு பருத்தி உருண்டையை பச்சை பாலில் நனைத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பாலில் உள்ள ஊட்டசத்துக்கள் தோலை வயதாகுவதை தடுகிறது.
மாதவிடாய் நின்ற பிறகும் சருமத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு பாலை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும். இதை மாத்திரமே செய்யாமல் ஒரு பொருளை பாலுடன் சேர்த்து பாவிப்பதால் பல நன்மைகள் ஏற்படும்.
பாலுடன் தேன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
பால் + தேன்
பச்சை பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சினைகள் நீங்கி விடும்.
பாலில் ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாக்குகின்றன.
மேலும், இதில் உள்ள இயற்கையான கொழுப்பு, புரதம் மற்றும் நீர் ஆகியவை சருமத்தை மென்மையாக்குகிறது.
குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமங்கள் பருக்கள் முதல் அரிப்பு வரை, சொறி பிரச்சனைகளை ஏற்படுவதில் இருந்து தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |