முகம் பொலிவுடன் இருக்க குங்குமப்பூ பேஷ்பேக்!..இதை எப்படி தயாரிப்பது?
முகத்திற்கு குங்குமப்பூவைப் பயன்படுத்துவது பல நன்மைகளை தருகிறது. குங்குமப்பூ முகத்திற்கு இயற்கையான பிரகாசத்தை வழங்குகிறது.
கூடுதலாக, இது கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. அதே போல் சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
குங்குமப்பூவில் வைட்டமின் சி போன்ற இயற்கை ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை வைத்து செய்யப்படும் குங்குமப்பூ முகக் கிரீம் சூரியனால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
குறிப்பாக முகம் வெள்ளையாக வேண்டும், ஜொலிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் தாராளமாக குங்குமப்பூவை தேர்ந்தெடுக்கலாம்.
இதனால் செய்யபப்டும் பேஸ்பேக்கை வராம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல result கிடைக்கும்.இந்த பேஸ்பேக்கை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருள்
- குங்குமப்பூ - சிறிதளவு
- தயிர் - 1 டீஸ்பூன்
- தேன் 2 சொட்டு
- எலுமிச்சை சாறு - சிறிதளவு
பயன்படுத்தும் முறை
கிண்ணத்தில் குங்குமப்பூவுடன் தயிர், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்பு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் ஊற விடவும்.
பின்பு நார்மல் வாட்டரில் முகத்தை சுத்தம் செய்யவும்.
வாரத்திற்கு 3 முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |