என்னது...! எச்சிலை வைத்தே கர்ப்பத்தை உறுதி செய்யலாமா?
பொதுவாகவே ஒரு பெண் தனது கர்ப்ப காலத்தை எதிர்பார்த்து இருப்பது வழக்கம். அதிலும் வைத்தியசாலை சென்று பரிசோதிப்பவர்க விட வீட்டில் வைத்து பரிசோதிப்பவர்கள் அதிகம்.
இதுவரையில் ஒவ்வொரு பெண்களின் சிறுநீரையும் வைத்து தான் பரிசோதனையானது செய்யப்பட்டது. ஆனால் தற்போது உலகத்திலேயே முதன்முறையாக எச்சிலை வைத்து செய்யலாம் என கண்டுப்பிடிக்கப்பட்டள்ளது.
அதை செய்வது சாத்தியமா மற்றும் எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எச்சில் வைத்து சோதிப்பது எப்படி?
இந்த கருவியானது கொரோனா காலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு கருவியாகும். எங்கும், எந்த நேரத்திலும் சோதிக்கும் திறனை வழங்கும் இந்த தனித்துவமான தயாரிப்பை ஜெருசலேமைச் சேர்ந்த 'சாலிக்னோஸ்டிக்ஸ்' என்ற ஸ்டார்ட்-அப் உருவாக்கியுள்ளது.
இதில் ஒரு குச்சி இருக்கும். அந்த நுனியை வாயில் வைப்பது போன்று வைத்துக் கொள்ள வேண்டும்.
அது உமிழ்நீரை சேகரிக்கும். அந்த உமிழ்நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும்.
அப்போது, கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் (எச்.சி.ஜி) இருக்கிறதா என்பதை கண்டறியப்படும்.
இவ்வாறு பரிசோதனை செய்வதன் மூலம் 5 முதல் 15 நிமிடங்களுக்குள் பரிசோதனைக்கான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இது தற்போது இங்கிலாந்திலும் அயரை்லாந்திலும் தான் விற்பனைக்கு இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |