முகப்பருவா? கவலை விடுங்க..தேனை இப்படி பயன்படுத்தி பாருங்க விரைவில் பயன் தெரியுமாம்!
பொதுவாக இளம் வயது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, பருவ காலத்தில் உடல் நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் அவர்களுக்கு முகத்தில் முகப்பருக்கள் வரத்தான் செய்யும்.
இந்த முகப்பருக்களை நினைத்து இளம் வயது பெண்களும் ஆண்களும் அதிகமாகவே கவலைப்படுதுண்டு.
காரணம் முகப்பரு வந்து மறைந்தாலும், அந்த இடத்தில் முகப்பரு வந்து போன தழும்பு அப்படியே இருக்கும். அந்த தழும்பையும் நிரந்தரமாக நம்மால் நீக்க முடியும். மீண்டும் மீண்டும் முகப்பரு வராமல் இருக்க அந்த முகப்பருவை வேரில் இருந்து நீக்கவும் முடியும்.
அதற்கு ஒரு சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றது. அதில் ஒன்று தான் தேன். இது முகப்பருவை இயற்கை முறையில் நீக்குகின்றது. தற்போது தேனை எப்படி எல்லாம் முகப்பருவிற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- ஆப்பிள் சில துண்டுகளை எடுத்து மசித்து அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்த்து வெதுவெதுப்பான நீர் கலந்து அடர்த்தியான பேஸ்ட் ஆக்கவும். இதை முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
- இரண்டு டீஸ்பூன் பால், இரண்டு டீஸ்பூன் தேன், ஒரு எலுமிச்சையிலிருந்து சாறு, ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் வெதுவெதுப்பான நீர். அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் வைத்து நன்றாக கலந்து எடுக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி விடவும். பிறகு மிண்டும் இரண்டாவது அடுக்கை முகத்தில் தடவி கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக முகப்பரு பகுதிகளில் தடவி முடித்ததும் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.
- இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். முகப்பரு பாதித்த இடத்தில் மட்டுமல்லாமல் முகம் முழுக்க தடவலாம். இதை தூங்குவதற்கு முன்பு செய்யலாம். இரவு முழுக்க விட்டு விட்டு மறுநாள் காலையில் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு உங்கள் முகப்பரு தீவிரம் குறைவதை பார்ப்பீர்கள்.
- கற்றாழை சாறுடன் தேன் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைக்கவும். முகப்பரு இருக்கும் இடத்தில் தடவுவதற்கு முன்பு கலவையை பத்துநிமிடங்கள் வைத்திருந்து கழுவலாம்.
- இரண்டு துளி டீ ட்ரீ ஆயிலுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து எடுக்கவும். இதை பாதிக்கப்பட்ட முகம் முழுவதும் தடவி எடுக்கவும். 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். வாரம் 3 முறை இதை செய்யலாம்.