iPhone காணப்படும் இந்த வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?
நம்மில் பலரும் iPhone பயன்படுத்தி வருகின்றோம், இந்த வகை ஸ்மார்ட்பேசிகளில் காணப்படும் பல்வேறு வசதிகள் பற்றி நமக்குத் தெரியாது அல்லது அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை.
அவ்வாறான ஓர் வசதி பற்றி நாம் இன்று அறிந்து கொள்வோம். உங்களது iPhone ல் ஏதேனும் ஒன்றை டைப் செய்யும் போது அதில் பிழைகள் ஏற்பட்டால் அதனை Undo செய்து கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது.
உதாரணமாக நீங்கள் டைப் செய்த ஒர் வசனத்தின் இறுதி சொல் பிழையானது என்றால் அதனை Undo செய்வதன் மூலம் மீளவும் டைப் செய்து கொள்ள முடியும்.
கணனிகளில் இதற்காக நாம் Ctrl + Z என்ற Shortcut Key ஐ பயன்படுத்துவோம். இதேபோன்று ஐபோன்களில் Undo செய்ய இலகுவான வழியாக Shake அல்லது ஐபோனை குழுக்குவது போதுமானது.
ஐபோன்களில் இயக்கும் போது ஏற்படும் தவறுகளை தடுத்துக் கொள்ள இந்த Undo வசதி உதவி செய்கின்றது.
குறிப்பாக குறுஞ்செய்தி ஒன்றையோ வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் ஏதேனும் தட்டச்சு செய்யும் போதோ அல்லது Notes செயலியில் தட்டச்சு செய்த ஒன்றை மாற்றவோ, ஏற்கனவே தட்டச்சு செய்திருந்த ஒரு விடயம் தவறுதலாக அழிபட்டு விட்டால் அதனை மீள எடுக்கவும் இந்த Shake to Undo வசதி உதவுகின்றது.
ஐபோன்களில் இந்த வசதி காணப்படுகின்றது, இந்த வசதி உங்களுக்குத் தேவையில்லை என்றால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் அதனை நீக்க முடியும்.
1. செட்டிங்கை கிளிக் செய்யவும்
2. Accessibility ஐ தெரிவு செய்யவும்
3. "Touch" ஐ தெரிவு செய்யவும்
4. Shake to Undo என்ற பட்டனை டர்ன் ஆப் செய்யவும்
Shake to Undo வசதி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வலது புறமிருந்து இடது புறமாக உங்களது மூன்று விரல்களை திரையில் அழுத்திச் செல்வதன் மூலம் Undo செய்ய முடியும்