PF பணத்தை எளிமையான முறையில் எடுக்க வேண்டுமா? 2 நிமிடங்கள் போதும்
உங்களுடைய PF கணக்கில் இருந்து பணத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற தகவலை இந்த பதிவில் எளிமையாக காணலாம்.
PF Withdrawal
அரசு நிறுவனத்தில் வேலை செய்தாலோ அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலோ ஊழியர்களுக்கு சம்பள பணத்தில் இருந்து பிஎஃப் தொகை (PF Amount) பிடித்தம் செய்யப்படும். இதனை ஊழியர்கள் பணியில் இருந்தாலோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
Istock
இதில், பணியில் இருக்கும் பிஎஃப் தொகையை ஊழியர்கள் எடுக்க நினைத்தால் சில விதிமுறைகள் உண்டு. அதன்படி, கல்வி, மருத்துவம், திருமணம், நிலம் வாங்குவது, வீட்டுக் கடன், வீடு சீரமைப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக மட்டுமே எடுக்க முடியும் என்ற வரைமுறைகள் உள்ளது.
EPF சந்தாதாரர் சில எதிர்பாராத நேரத்தில் வேலையை இழந்தால் 75% மட்டுமே டெபாசிட் தொகையில் இருந்து திரும்ப பெற முடியும். 2 மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் மீதமுள்ள 25% தொகையை திரும்ப பெறலாம்.
PF பணத்தை எடுக்க என்னென்ன தேவை?
- UAN எண்
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
- ஆதார் எண்
- ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு
- பிஎஃப் பணத்தை எடுப்பதற்காக ஆவணங்கள்
Istock
என்ன செய்ய வேண்டும்?
* முதலில் நீங்கள் EPFO e-SEWA போர்டலில் லாக் இன் (Log in) செய்ய வேண்டும்.
* அடுத்து பணத்தை பெறுவதற்கான கிளைம் (Claim) செக்சனுக்கு செல்ல வேண்டும்.
* அதில் வங்கி கணக்கு (Bank Account) விவரங்களை பதிவிட வேண்டும்.
* பின், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை கிளிக் செய்ய வேண்டும்.
* அடுத்து பணம் எடுப்பதற்கான காரணத்தை பதிவிட்டு, கேட்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவனங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* இறுதியில் ஒடிபி (OTP) பதிவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கிற்கு பிஎஃப் பணம் credit செய்யப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |