கனடாவில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு பயனுள்ள ஒரு தகவல்
எந்த வேலையானாலும், அதற்கு விண்ணப்பிப்பதில் Resume முக்கியப் பங்காற்றுகிறது.
அவ்வகையில், கனடாவில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு உதவும் resume எழுதுவது எப்படி என்பதைக் குறித்த சில விடயங்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
Resumeஇல் இடம்பெறவேண்டியவை என்ன, இடம்பெறக்கூடாதவைகள் என்ன என்பது போன்ற விடயங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
- கனேடிய Resumeஇல் குறிப்பிடக்கூடாத ஐந்து விடயங்கள்
புகைப்படத்தை இணைக்காதீர்கள்
சில நாடுகளைப்போல, கனடாவில், உங்கள் Resumeஇல் உங்கள் புகைப்படத்தை இணைக்கவேண்டிய அவசியம் இல்லை (நீங்கள் நடிகராகவோ அல்லது மொடலாகவோ இருந்தாலன்றி).
அதிக விடயங்களை பகிராதீர்கள்
உங்களைக் குறித்த மிகவும் பர்சனலான விடயங்களை உங்கள் Resumeஇல் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு வேலை கொடுப்பவருக்கு வேண்டிய தகவல்கள், உங்கள் பெயர் மற்றும் உங்களை எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என்பவைதான். உங்கள் மதமோ, நீங்கள் திருமணமானவரா இல்லையா என்பதோ அவருக்கு அவசியம் இல்லை.
ஒரு முக்கிய விடயம், உங்கள் Resumeஇல் உங்கள் Social Insurance Number (SIN)ஐ நீங்கள் இணைக்கக்கூடாது. அது முக்கியமான ஒரு தகவலாகும். அதை சட்டப்படி எங்கு தேவையோ அங்கு மட்டுமே நீங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
உங்கள் தொழில் சார்ந்த விடயங்கள், அனுபவம், பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முதலான அடிப்படை விடயங்கள்தான் அவசியம்.
வளவளவென்று அதிகம் எழுதாதீர்கள்
ஒரு பக்கத்துக்கு விவரங்களை எழுதினால் போது, அதிகமானால் இரண்டு பக்கங்கள் அவ்வளவுதான். உங்கள் Resume, short and sweetஆக இருக்கவேண்டும்.
References குறிப்பிடத் தேவையில்லை
உங்களுக்கு வேலை கொடுப்பவருக்கு reference வேண்டுமானால், அவர் கேட்பார். நீங்கள் ஒருவரைக் குறித்து reference செய்யும் முன், அவரிடமும் நீங்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவிப்பது நல்ல பழக்கம்.
முறையற்ற ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்காதீர்கள்
உங்களுக்கு வேலை கொடுப்பவர்கள், இதுபோன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் உயர்பள்ளியில் படிக்கும்போது வேடிக்கைக்காக உருவாக்கிய ஒரு மின்னஞ்சல் முகவரியை வேலைக்கு விண்ணப்பிக்கும் இடத்தில் கொடுப்பீர்களானால், அதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என அவர்கள் முடிவு செய்யக்கூடும்.
- கனேடிய Resumeஇல் குறிப்பிடவேண்டிய ஐந்து விடயங்கள்
உங்கள் resumeஐ நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கேற்றாற்போல் மாற்றுங்கள்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் resumeஐ நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கேற்றாற்போல் மாற்றுவது சற்று கடினமான, நேரம் எடுத்துக்கொள்ளும் விடயம்தான். ஆனாலும், பொதுவாக வேலைக்கென நீங்கள் தயாரித்த ஒரு resumeஐ அனுப்புவதைவிட, நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கேற்ற வகையில் அதில் மாற்றங்கள் செய்து அனுப்புவதால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
உங்கள் அனுபவத்தை எண்களில் கொடுக்க முயற்சியுங்கள்.
உங்கள் அனுபவத்தை எண்களில் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு மேலாளராக பணியாற்றினீர்கள் என்றால், நீங்கள் எத்தனை பேரை மேற்பார்வை செய்தீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். நீங்கள் விற்பனைப் பிரிவில் வேலை செய்திருந்தால், எத்தனை தயாரிப்புகளை விற்பனை செய்தீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.
Third personஇல் எழுதுங்கள்
நான், எனது, என்ற பதங்களைக் குறிப்பிடாமல், third personஆக எழுதுங்கள்.
வேலை அனுபவத்தைக் குறிப்பிடும்போது, உங்கள் பெயரைக் குறிப்பிட்டு, உங்கள் நிறுவனம், உங்கள் அனுபவம் முதலானவற்றைக் குறிப்பிடுங்கள். கல்வியைக் குறிப்பிடும்போது, பள்ளி, கல்வித்திட்டம், திகதிகள் முதலானவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
ஊதியம் இல்லாமல் வேலை செய்த அனுபவங்களையும் குறிப்பிடுங்கள்
நீங்கள் தன்னார்வலராக பணியாற்றிய விவரங்களையும் குறிப்பிடுங்கள் (அவை, இப்போது நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும்).
Cover letter ஒன்றை இணையுங்கள்
உங்களுக்கு வேலை கொடுப்பவர் கேட்காவிட்டாலும், எப்போதுமே Cover letter ஒன்றை இணைப்பது நல்லது.
ஒரு Cover letter, உங்கள் resumeக்கு அழகூட்டும். நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர் என்பதை உங்களுக்கு வேலை கொடுப்பவருக்கு அது காட்டும்.
உங்கள் Cover letterஇல், நிறுவனத்தின் பெயர், முகவரி, உங்கள் முகவரி, தொலைபேசி எண் முதலானவை இடம்பெற்றிருக்கவேண்டும். அது மிக நீளமானதாக இருக்கக்கூடாது. இங்கே நீங்கள், நான், எனது என்ற பதங்களைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் யார், ஏன் உங்களுக்கு இந்த வேலை வேண்டும், என்பவற்றை முதல் பாராவில் குறிப்பிடுங்கள். நன்றி சொல்லி கடிதத்தை முடியுங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு... https://www.cicnews.com/2021/11/how-to-write-a-canadian-resume-1118895.html#gs.hpr67r

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021