2021 கடைசி சூரிய கிரகணம்! எங்கு, எப்போது, எந்த நேரத்தில் தெரியும்?
2021 ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் திகதி 2021 நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அமாவாசை அன்று அதாவது மார்கழி மாதத்தில் விருச்சிக ராசியில் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதி 2021 சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இந்த சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணி வரை நீடிக்கும். 4 மணி நேரம் 8 நிமிடங்கள் வரை நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணம் தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் பகுதி தெரியும்.
இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியாது என்றாலும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் இணையதளத்தில் நேரடியாக காண முடியும்.
மேலும் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, நான்கு மணி நேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.