பிரான்சில் மீண்டும் ஒரு புலம்பெயர்தல் சட்டம்: வெளிநாட்டவர்களுக்கு என்ன பாதிப்பு?
பிரான்சில் ஏற்கனவே ஒரு புலம்பெயர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் மீண்டும் ஒரு புலம்பெயர்தல் சட்டத்தைக் கொண்டு வர புதிய அரசு திட்டமிட்டுவருகிறது.
பிரான்சில் மீண்டும் ஒரு புலம்பெயர்தல் சட்டம்
பிரான்சில், 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு ஜனவரி மாதம், ஒரு புதிய புலம்பெயர்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதற்கு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒன்றிணைந்து வாழ்தலை மேம்படுத்தும் சட்டம் என்று பெயர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு புலம்பெயர்தல் சட்டத்தைக் கொண்டுவர புதிய அரசு திட்டமிட்டுவருகிறது.
ஆக, இரண்டாவது புதிய புலம்பெயர்தல் சட்டம் வெளிநாட்டவர்கள் மீது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது?
முந்தைய சட்டம், சில குடியிருப்பு அனுமதிகள் பெறுவதற்கு கூடுதலாக ஒரு பிரெஞ்சு மொழித் தேர்வு எழுதவேண்டும், குடியுரிமை பெறுவதற்கான மொழியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்னும் விதிகளைக் கொண்டுவந்தது.
அத்துடன், புலம்பெயர்ந்தோர் அனைவரும், குடியிருப்பு அனுமதி பெற அல்லது புதுப்பிக்கவேண்டுமானால், நாட்டின் கொள்கைகளை மதிப்போம் என உறுதிகூறும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திடவும் அந்த சட்டம் வகை செய்தது.
அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள சட்டமோ, ஏற்கனவே உள்ள சட்டங்களுடன், குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் ஆபத்தானவர்கள் என கருதப்படும் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் அமைந்திருக்கும் என அரசின் செய்தித்தொடர்பாளரான Maud Bregeon என்பவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், இப்போதைக்கு அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மீதே கவனம் செலுத்த இருப்பதாக பிரதமர் மிஷெல் பார்னியேர் தெரிவித்துள்ளதால் புதிய சட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |