பெண்களை இப்படி நடத்தினால் எப்படி இராணுவத்தில் சேருவார்கள்?: வெளியாகியுள்ள ஒரு முகம் சுழிக்கவைக்கும் தகவல்
சுவிட்சர்லாந்தில் பெண்கள் இராணுவத்தில் சேர அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
இராணுவத்தில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பெண்கள் இருப்பதால், தற்போது இராணுவத்தில் பெண்களை சேர்க்க அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இராணுவத்தில் பெண்கள் குறித்த சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
இயற்கையாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல்வாகு வித்தியாசமாக இருக்கும் நிலையிலும், இராணுவத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சீருடைதானாம்.
அதாவது, ஆண்கள் என்ன அணிகிறார்களோ அதையேதான் பெண்களும் அணியவேண்டும் என்ற நிலை உள்ளதாம்.
தற்போது, மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சீருடை மட்டுமல்ல, பெண்களுக்கென்று தனியாக உள்ளாடைகளும் கிடையாதாம்.
ஆண்களின் உள்ளாடைகளைத்தான் பெண்களும் அணியவேண்டுமாம். பிறகெப்படி பெண்கள் இராணுவத்தில் சேருவார்கள்? ஆக, சுவிஸ் இராணுவ வரலாற்றில், முதன்முறையாக, இப்போது உடை விவகாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாம்.
அதன்படி பெண்களுக்கு தனி உள்ளாடைகள் வழங்கப்பட உள்ளன. அதுவும் கோடை காலத்துக்கேற்ற ஒன்று, குளிர் காலத்துக்கேற்ற ஒன்று என இரண்டு வகை