கூகுள் குரோமில் வரும் தொல்லை ஏற்படுத்தும் விளம்பரங்களைத் தடுப்பது எப்படி.? இதோ எளிய வழிமுறைகள்
பொதுவாக இணையத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தேடிப்படிப்பது மிகப்பெரும் வேலையாக இருக்கும் நிலையில், நம்மை அதிகம் சோதிக்கும் விடயமாக விளம்பரங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு தளமும், சேவையும் அடுத்தடுத்த நொடிகளில் நம் கவனத்தை ஈர்க்க விளம்பரங்களை தெரியப்படுத்துகின்றன.
இது அடிக்கடி வருவதனால் பெரும் தொல்லையாக காணப்படும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தற்போது பார்ப்போம்.
- கூகுள் குரோமின் முகப்பு பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட மெனு மீது தட்டி, அமைப்புகளை அணுகவும்.
- இதன்பிறகு, "தள அமைப்புகள்" என்பதை தேர்ந்தெடுத்து, "விளம்பரங்கள்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- அங்கே உள்ள ஒரு மாற்று தேர்வை முடக்குவதன் மூலம், நீங்கள் காண விரும்பாத விளம்பரங்களைத் தடுத்து விடலாம்.
அனைத்து விளம்பரங்களையும் நிறுத்துவது
இணையத்தில் இயங்கி வரும் பல்வேறு வலைத்தளங்களும் வருவாய் ஈட்ட விளம்பரங்களை அதிகம் நம்புகின்றன. இவ்வாறான தளங்களில் நீங்கள் இருக்கும் பகுதி, குறிப்பிட்ட வலைத்தளத்தின் தரவுகள் சார்ந்து விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும்.
இங்கு உங்களுக்கு தேவையான அல்லது பொருத்தமான விளம்பரங்களை எதிர்பார்க்க முடியாது. கூகுள் கான்ட்ரிபியூட்டர் சேவையை பயன்படுத்தி குறைந்த அளவு விளம்பரங்களை மட்டும் பார்க்க முடியும்.