பிரான்சை உலுக்கிய HR killer: அரசு சட்டத்தரணி விடுத்துள்ள கோரிக்கை
பிரான்சில் 2021ஆம் ஆண்டு, தொடர்ச்சியாக மூன்று பெண் மேலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கு French HR murders என்றே அழைக்கப்பட்டது. பிரான்சை உலுக்கிய அந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்தது.
வரிசையாக கொல்லப்பட்ட பெண்கள்
2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் திகதி, கிழக்கு பிரான்சிலுள்ள Alsace என்ற இடத்தில் மனிதவள மேலாளரான (HR manager) Estelle Luce என்பவர், பணி முடித்து வீட்டுக்குப் புறப்படும்போது, கார் பார்க்கிங்கில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார்.
சிறிது நேரத்திற்குப் பின், 50 கிலோமீற்றர் தொலைவில், Bertrand Meichel என்னும் மனிதவள மேலாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்ய வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பின் 500 கிலோமீற்றருக்கு தெற்கே அமைந்துள்ள உள்ளூர் பணி மையம் ஒன்றிற்குள் நுழைந்த மாஸ்க் அணிந்த ஒருவர், Patricia Pasquion என்னும் பெண் மேலாளரை சுட்டுக் கொன்றார்.
சில நிமிடங்களுக்குள், அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தின் மனிதவள மேலாளரான Géraldine Caclin என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
அந்த பெண்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டவர் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை வைத்து பொலிசார் குற்றவாளியைப் பிடித்தார்கள்.
அவரது பெயர் கேபிரியல் (Gabriel Fortin, 49) என தெரியவந்தது. பொறியாளரான கேபிரியல், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் தான் பணி செய்த இடங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட அந்தப் பெண்களில் சிலர் காரணமாக இருந்துள்ளார்கள். அவர் பணிக்கு விண்ணப்பித்தபோதும் சிலர் அவரை பணிக்கு அழைக்கவில்லையாம்.
ஆக, பல ஆண்டுகளாக, வன்மம் வைத்து அந்தப் பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்த கேப்ரியல், ஒரு நாள் அவர்களை சுட்டுக் கொன்று பழி தீர்த்துக்கொண்டுள்ளார்.
தண்டனை அறிவிப்பு
கேப்ரியல் மீது மூன்று கொலைக்குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன. பிரான்சிலுள்ள Valence நகர நீதிமன்றம் ஒன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கேப்ரியல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால், அரசு சட்டத்தரணி, கேப்ரியல் தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், மன நல சிகிச்சை பெற மறுத்துவிட்டதாகவும் கூறி, அவருக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றவேண்டும் என அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், கேப்ரியலால் சுடப்பட்டு உயிர் பிழைத்த Bertrand Meichelஇன் சட்டத்தரணியான Laurence Buisson என்பவரும், எங்களுக்கு அந்த நபர் மீது எந்த வெறுப்பும் இல்லையென்றாலும், அவர் நிச்சயமாக சமுதாயத்திற்கு மீண்டும் திரும்பாத வகையில், சமுதாயத்தினின்று அகற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கேப்ரியலில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லயென்றால், அவர் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறையில் செலவிடவேண்டியிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |