நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொல்லப்பட்டார் என அதிர்ச்சி கிளப்பிய பிரபலம்! தற்போது அடித்த அந்தர் பல்டி
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டவர்.
அந்த வகையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான் என்ற சர்ச்சை கருத்தை கூறியிருந்தார்.
எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ்.
காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, பொய்யான கருத்துகளை பரப்பிவருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது, மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற அல்-உம்மா இயக்கத்தில் ஜவாஹிருல்லா உறுப்பினராக இருந்தவர் தான்.
இவர் குற்றம் செய்ததாக நான் சொல்லவில்லை. இவர் அல்-உம்மா உறுப்பினர் மட்டும் அல்ல, அல்-உம்மாவை துவங்கியதே எஸ்.எம்.பாஷாவும், ஜவாஹிருல்லாவும் தான். அல் -உம்மா தடை செய்யப்பட்டதற்கு காரணமே கோவை குண்டுவெடிப்பு சம்பவம்தான்.
முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரே ஒரு தவறு என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர். அதனால் தவறுதலாக அவர் பெயரை கூறி விட்டேன். அது என் தவறுதான்.
அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது என கூறியுள்ளார்.