12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!
2022 - 2023ம் ஆண்டு +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்பட்ட துணைத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது.
இதற்கான முடிவுகள் இன்று வெளியாகிறது,
தேர்வு முடிவுகளை காண மாணவர்கள், DGE இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM JUNE/JULY 2023 - RESULTS DOWNLOAD” என்ற லிங்கை கிளிக் செய்து, உங்களது பதிவு எண் மற்றும் பிறந்த திகதியை குறிப்பிடவும்.
உங்களுக்கான தேர்வு முடிவுகள் காட்டப்படும், இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்து இந்த ஆண்டே கல்வியை தொடர முடியும்.
இதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |