சுவிட்சர்லாந்தில் நடந்த விசித்திரம்! ஆளே இல்லாத கார் பெண் மீது 3 முறை ஏறி இறங்கிய சம்பவம்
தனது சொந்த காரில் இருந்து கீழே இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம்
அந்த பெண் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்று வீணாக கீழே விழுந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தனது சொந்த காரிலிருந்து கீழே இறங்கியபோது, அதே கார் கார் என்ஜின் மட்டும் இயங்கிக்கொண்டிருந்த நிலையில், அவர்மீது மூன்று முறை ஏறி இறங்கியதால் பலத்த காயம் அடைந்துள்ளார்.
வடகிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் கேலனில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் சத்துள்ளது.
பாதிக்கப்பட்ட 45 வயதான அப்பெண், தனது காரின் டிக்கியில் இருந்து எதோ ஒரு பொருளை எடுப்பதற்காக கீழே இறங்கியுள்ளார். அப்போது, என்ஜின் இயக்கத்தில் இருந்த அந்த கார் சிறிது சரிவில் இருந்ததால் பின்னோக்கி உருள ஆரம்பித்தது.
அந்த பெண் வாகனத்தை நிறுத்த முயன்று வீணாக தரையில் விழுந்தார், அப்போது கார் அவர்மீது முதல் முறை ஏறியது.
switzerlandtimes
சற்று வேகமெடுத்த கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி எதிர் திசையில் மீண்டும் நகர்ந்ததில், இரண்டாவது முறையாக அந்த பெண் மீது ஓடியது.
அதோடு நீக்காமல், அந்த கார் ஒரு நடைபாதையில் மோதி, அந்தப் பெண்ணை நோக்கி திரும்பியதும் மூன்றாவது முறையாக அவர்மீது ஏறி இறங்கியது. இறுதியாக ஒரு மரத் தடுப்பில் மோதி கார் நின்றது.
இதையடுத்து, அப்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசித்திரமான மற்றும் மிகவும் அரிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.