ஜேர்மன் நகரம் ஒன்றில் பிரம்மாண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
ஜேர்மன் நகரமான பிராங்க்பர்ட்டில் பிரம்மாண்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. Nordend என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக பள்ளம் தோண்டும்போது, கட்டிடப்பணியாளர்கள் 500 கிலோ எடையுள்ள அந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்தார்கள்.
அந்த இடத்துக்கு அருகிலேயே பிள்ளைகள் விளையாடும் ஒரு விளையாட்டுத்திடலும் இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று அந்த பிரம்மாண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளிலிருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இன்று அதிகாலை அந்த குண்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அந்த வெடிகுண்டை கட்டுப்படுத்தப்பட்ட முறையில், 40 ட்ரக்குகள் நிறைய அதன் மீது மணலைக் கொட்டியபின் செயலிழக்கச் செய்தாலும், அது வெடிக்கும்போது இடி முழக்கம் போல் சத்தம் கேட்டதாகவும், அது வெடித்த இடத்தில் மூன்று மீற்றர் ஆழம், பத்து மீற்றர் அகலத்திற்கு பள்ளம் உருவானதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
❗ A WW2 bomb in Frankfurt‘s Nordend has to be defused as soon as possible❗
— Frankfurt am Main (@Stadt_FFM) May 19, 2021
It’s necessary to leave the entire marked area immediately. All information available here ? https://t.co/DZs3ekhHSO. Follow @feuerwehrffm & @Polizei_Ffm for latest news.
Please share! pic.twitter.com/yGkHCagOhF