பிரித்தானிய விமான நிலையங்களில் இயங்காமல் போன தானியங்கி அமைப்பால் தவித்த மக்கள்
பிரித்தானியா முழுவதுமுள்ள பல விமான நிலையங்களில், e-gates எனப்படும் தானியங்கி அமைப்பு செயல்படாமல் போனதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
e-gates
விமானப்பயணிகளின் பாஸ்போர்ட் முதலான ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்த நீண்ட நேரம் பிடிப்பதால், அதை எளிதாக்கும் வகையில், e-gates என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அது ஒரு தானியங்கி அமைப்பு.

Image: MEN
அதாவது, கருவி ஒன்றின் மீதி பாஸ்போர்ட்டை வைத்துவிட்டு, முகத்தை ஸ்கேன் செய்யும் ஒரு கமெராவுக்கு முன்னால் நின்றாலே, வெறும் 40 விநாடிகளுக்குள் பயணிகளின் தரவுகளை ஆராய்ந்து அவர்களை பயணிக்க தயார் செய்யும் அந்த அமைப்பு. விமானத்தில் பயணித்து, விமான நிலையத்துக்குள் நுழையும்போதும் இதே முறையைப் பின்பற்றலாம்.
பிரித்தானிய விமான நிலையங்களில் பெரும் குழப்பம்
ஆனால், நேற்றிரவு, பிரித்தானியா முழுவதுமுள்ள பல விமான நிலையங்களில், e-gates எனப்படும் தானியங்கி அமைப்பு செயல்படாமல் போனதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

Image: @dheerajcr/X
தானியங்கி அமைப்பு செயல்படாமல் போனதால், 40 விநாடிகளில் முடிய வேண்டிய சோதனைக்கு ஒன்றரை மணி நேரம் ஆக, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பிள்ளைகள் உணவோ தண்ணீரோ இல்லாமல் தவிக்க, விமான நிலைய கழிவறைகளில் தண்ணீர் தீர்ந்துபோக, தங்கள் கோபத்தையும் அவஸ்தையையும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள் பயணிகள்.

Image: Supplied
ஏதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியவராத நிலையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Image: Supplied
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |