குஜராத் இரசாயன தொழிற்சாலையில் பயங்கிர வெடிவிபத்து! அதிரவைக்கும் வீடியோ காட்சி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து மற்றும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தீபக் நைட்டி தொழிற்சாலையில் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. வெகு தூரத்தில் புகை தெரிந்தது.
தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு விண்ணை நோக்கி நெருப்பும் அடர்த்தியான புகையும் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வைரலாகி வருகிறது.
WATCH: Massive explosion at Deepak Nitrite’s GIDC chemical plant in India' Gujarat pic.twitter.com/yKYpulvkZK
— Insider Paper (@TheInsiderPaper) June 2, 2022
இந்த விபத்தில் யாருக்கும் இதில் எந்த காயமும் ஏற்படவில்லை. புகையை சுவாசித்த ஏழு தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கையாக, தொழிற்சாலையை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று வதோதரா ஆட்சியர் ஆர்.பி.பரட் தெரிவித்தார்.
ஒரு அறிக்கையில், தீபக் நைட்ரைட் அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
Footage from India, where there was a fire and explosion at a chemical plant in Gujarat. At least eight workers at the plant were injured. pic.twitter.com/oDDJtmc7SY
— Captain Singh, FICArb, 73K (@captsingh) June 3, 2022