பிரான்சில் ரகசிய விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம்! எச்சரிக்கை தகவல்
பிரான்சில் சுகாதாரக் கட்டுப்பாடுகளை ரகசிய விருந்தில் கலந்து கொண்ட 90 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சில், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசு தெரிவித்திருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறினால், அபராதம் அல்லது கைது கூட செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு, Collegien ,Seine-et-Marne நகரில் இருக்கும், பொருட்கள் சேமிப்பகம் ஒன்றில் இரவு 9 மணி ரகசிய விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது.
இதில் சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய விருந்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றாமல் இருப்பதாக பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.
அப்போது அங்கு ஏராளமானோர் முகக்கவசம் அணியாமலும், சுகாதார இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்துள்ளனர்.
இதையடுத்து, விருந்தில் கலந்துகொண்ட 90 பேருக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.