வானளாவிய கட்டிடத்தில் பரவிய பயங்கர தீ: ஹாங்காங்கில் இரவு பகலாய் தொடரும் தீயணைப்பு மீட்பு பணி
வணிக மாகாணமான ஹாங்காங்கில், சிம் ஷா சுய் மாவட்டத்தில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பரவிய பாரிய தீ விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் பலர் வெளியேற்றப்பட்டனர்.
வானளாவிய கட்டிடத்தில் தீ
ஹாங்காங்கின் பிரபலமான ஷாப்பிங் பகுதியில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் வியாழன் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விக்டோரியா துறைமுகத்தின் மறுபக்கத்தில் இருந்து, சிம் ஷா சுய் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முழுவதும் தெரிந்த தீப்பிழம்புகளை அணைக்கும் மறுவடிவமைப்பு திட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
A skyscraper under construction caught fire in Hong Kong last night. At least two victims are known.
— NEXTA (@nexta_tv) March 3, 2023
Firefighters extinguished the fire until morning. pic.twitter.com/xv5MV2NoBk
சிம் ஷா சுய் மாவட்டத்தில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பரவிய பாரிய தீ விபத்தை தொடர்ந்து, 170க்கும் மேற்பட்டோர் வெளியேற்றியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் சாட்சிகளின் கூற்றுப்படி, மூங்கில் சாரக்கட்டுகளால் மூடப்பட்ட கட்டிடத்தின் பல தளங்கள் தீயில் மூழ்கியுள்ளன மற்றும் எரியும் குப்பைகள் காற்றில் பரவியதால் அருகிலுள்ள ஆறு கட்டிடங்களுக்கு தீ பரவியது.
AFP/peter parks
விசாரணை மற்றும் மீட்பு பணி
வானளாவிய கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்த 250 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் போராடினார்கள் என துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரிகள் கியூங் சாய்-மிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.