பிரித்தானிய கடற்கரையில் ராட்சத குழியை தோண்டிய சிறுவர்கள்: வீடியோ வெளியிட்ட அதிகாரிகள் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் கடற்கரைக்கு செல்பவர்களுக்கு மணலில் ராட்சத குழிகள் தோண்டுவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராட்சத குழி
ஹோட்டல் ஒன்றுக்கு அருகே 6 அடியில் மணல் பள்ளம் தோண்டப்பட்டதை அடுத்து, ராட்சத குழிகள் தோண்டுவது குறித்து கடற்கரை செல்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Polzeath Beach Ranger சேவைகளின் தகவல்படி, கார்ன்வாலில்(Cornwall) பெற்றோர்கள் கவனித்துக் கொண்டிருக்க சிறுவர்கள் குழு ஒன்று மிகப்பெரிய மணல் பள்ளத்தை தோண்டி இருப்பது தெரியவந்துள்ளது.
Rangers have issued a warning to the public about the dangers of digging large pits after a passer-by alerted them to a 6ft hole dug by children on the beach in Polzeath, Cornwall.
— Sky News (@SkyNews) August 31, 2024
Latest UK news ? https://t.co/U3U4MCX2NB pic.twitter.com/WSxJ4c7pl3
அத்துடன் 1.8 மீட்டர்(6ft) ஆழம் கொண்ட பள்ளத்தை காட்டும் வீடியோவையும் முகநூல் பக்கத்தில் Beach Ranger சேவைகள் வெளியிட்டு, இந்த குழியை தோண்டிய குடும்பங்கள் மூடாமல் விட்டுவிட்டு சென்று விட்டதாகவும், இது உரிமம் பெற்ற வளாகத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்திலும், கடை ஒன்றின் பின் புறத்தில் அமைந்துள்ளது, இதனை இரவு நேரங்களில் பார்ப்பது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேலும் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து குழியின் ஆழத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக மணல் வறண்டு போகவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த குழியின் அளவு சிறுவர்களை மூடி மூச்சுத் திணறலை ஏற்படுத்த கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
[23TZP ]
Wadebridge சமூக தீயணைப்பு நிலையமும் இந்த வீடியோவை பகிர்ந்து, மணலில் விளையாடுவது ஆபத்து இல்லாத மகிழ்ச்சியாக தெரியலாம், ஆனால் பாதுகாப்பான முறையில் அதனில் ஈடுபடாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |