ஐபிஎல் ஏலத்தில் பரபரப்பு! ஹசரங்க ஏலத்தின் போது நிலை குலைந்து விழுந்த பிரபல பிரித்தானியா ஏலதாரர்
பெங்களூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் ஏலதாரர் Hugh Edmeades மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்று பெங்களூரில் தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் ஏலத்தில் 10 அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீர்களை ஏலம் ஏடுத்தனர்.
ஷிகர் தவானை ரூ.8.25 கோடி பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது, ஷ்ரேயஸ் அய்யரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணியும், , ரபாடாவை ரூ.9.25 கோடி பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கியது.
அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தி ஏடுத்தது. டுபிளெசிஸ் ரூ.7 கோடி பெங்களூர் அணியும், டி காக்யை ரூ. 6.75 கோடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வாங்கியது.
அதேசமயம், ரெய்னா, ஸ்மித் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை.
இந்நிலையில், இலங்கை வீரர் ஹசரங்க ஏலத்தின் போது திடீரென ஏலதாரர் Hugh Edmeades, மயங்கி தரையில் சரிந்ததது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு உடனே சம்பவயிடத்தில் வைத்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தற்போது, அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Hugh Edmeades மயங்கி விழுந்ததால் ஏலம் இடைநிறுத்தப்பட்டது. உடனே உணவு இடைவேளை விடப்பட்டது.
இந்நிலையில், உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு ஏலம் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Hugh Edmeades-க்கு பதிலாக சாரு சர்மா ஏலதாரராக செயல்படுவார் என ஐபிஎல் அறிவித்தள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த சர்வதே ஏலதாரரான Hugh Edmeades-க்கு இத்துறையில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
உலகளவில் இதுவரை 2,500 க்கும் மேற்பட்ட ஏலங்களை அவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The auctioneer at the #IPLMegaAuction2022, Hugh Edmeades, collapses all of a sudden & falls off the podium.
— K Mukhendu Kaushik ?? (@mukhendukaushik) February 12, 2022
Hope he’s well!
Also, there are so many people around & none have come forward to perform CPR.
Prayers ??#IPLAuction#IPL2022Auctionpic.twitter.com/cd1SBTmoaV