பிரபல ஹாலிவுட் நடிகரின் பிரித்தானிய குடும்பம்: வழக்கத்திற்கு மாறான விவகாரத்து..வெளிப்பட்ட இரகசியம்

Australia Actors Hollywood
By Sivaraj Jun 07, 2026 02:21 PM GMT
Report

நடிகர் ஹியூக் ஜாக்மேனின் பெற்றோரின் விவாகரத்து, அவரது சகோதர சகோதரிகளை பிரிய வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. 

ஹியூக் ஜாக்மேன்

எக்ஸ்-மென் படத்தில் லோகன் கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட்டில் பிரபலமானவர் ஹியூக் ஜாக்மேன். அதனைத் தொடர்ந்து, பல படங்களில் நடித்து உச்ச நடிகர்களில் ஒருவராக இவர் வலம் வருகிறார்.  

Hugh Jackman

ஒன்று கூடிய பிரித்தானிய அரச குடும்பம்., இளவரசியின் மகன் திருமணம்

ஒன்று கூடிய பிரித்தானிய அரச குடும்பம்., இளவரசியின் மகன் திருமணம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பிறந்த ஹியூக் ஜாக்மேன் (Hugh Jackman) பிரித்தானிய குடியுரிமையும் வைத்துள்ளார்.

ஹியூக் ஜாக்மேன் குறித்த விடயங்களில் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அள்ளிக்கூடியது அவரது குடும்பம் சார்ந்ததாகும்.

அதாவது, ஹியூக் ஜாக்மேன் ஒரு பிரித்தானிய குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் சாதாரண வாழ்க்கையை வாழும் உறவினர்களைக் கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது உறவினர்களில் கிட்டத்தட்ட அவரைப் போலவே தோற்றமளிக்கும் உடன்பிறப்பும் அடங்குவார்.  

Hugh Jackman

வழக்கத்திற்கு மாறாக விவாகரத்து 

மேலும், ஜாக்மேனின் பெற்றோர் வழக்கத்திற்கு மாறாக விவாகரத்து பெற்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரது பெற்றோரான கிறிஸ்டோபர் ஜாக்மேன், கிரேஸ் கிரீன்வுட் 1967யில் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 

ஆண்ட்ரூவின் பிள்ளைகள் இலவச மாளிகைகளில் வசிப்பதாக வெளியான தகவல்: மன்னரின் நடவடிக்கை

ஆண்ட்ரூவின் பிள்ளைகள் இலவச மாளிகைகளில் வசிப்பதாக வெளியான தகவல்: மன்னரின் நடவடிக்கை

அடுத்த ஆண்டே ஹியூக் ஜாக்மேன் சிட்னியில் பிறந்தார். ஆனால், அந்த தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கை சற்றும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஹியூக் ஜாக்மேனுக்கு 7 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் பிரிய முடிவு செய்துள்ளனர். 

Hugh Jackman

அதில் அவர்கள் எடுத்த அசாதாரணமான முடிவு என்னவென்றால், தங்களது குழந்தைகளை பாலின அடிப்படையில் பிரித்து, அவர்களைத் தங்களுக்குள் 10,000 மைல் இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வசிக்க வைக்க முடிவு செய்தனர்.

தாயார் கிரேஸ் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார். அதே சமயம் தந்தை கிறிஸ்டோபர் தனது மூன்று ஆண் குழந்தைகளுடன் (ஹியூக் ஜாக்மேன் உட்பட) அவுஸ்திரேலியாவிலேயே தங்கிவிட்டார்.

மிகவும் மோசமான அனுபவம்

இதனைக் குறிப்பிட்டு ஹியூக் ஜாக்மேன் கூறுகையில், "எனது அம்மா பிரிந்து சென்றது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான, திருப்புமுனையாக அமைந்த தருணம். அது மிகவும் மோசமான அனுபவம். என்னால் அதை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை; அவர் திரும்பி வருவார் என்று நான் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை" என்றார். 

Hugh Jackman

இதற்கிடையில், படத்தின் விளம்பரத்திற்காக லண்டன் வந்த ஹியூக் ஜாக்மேன் பேசிய விடயங்கள் மூலம், அவரது குடும்பத்தினர் குறித்த ஆச்சரிய விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.

அதாவது, அவரது சகோதரிகள் பிரித்தானியாவில் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்கின்றனர். மேலும் அவர்கள் ஹியூக் குறித்து பொதுவெளியில் பேசி கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

ஹியூக் ஜாக்மேனின் தாயார் பிரித்தானியா திரும்பியதும் நார்விச்சில் குடியேறியிருக்கிறார். 1978-யில் அவர் மறுமணம் செய்திருக்கிறார்.

தற்போது 86 வயதாகும் அவர் அங்கேயே வசித்து வருகிறார்; தன் தாய் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட காயங்கள் தற்போது ஆறிவிட்டதாக ஹியூக் கூறுகிறார். அத்துடன் அவர் தாயுடன் நல்லுறவைக் கொண்டுள்ளார்.  

Hugh Jackman

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US