89 பந்துகளில் 125 ஓட்டங்கள் விளாசியும் வீண்: 359 இலக்கினை 49 ஓவர்களில் எட்டிய நியூ சவுத் வேல்ஸ்
New south wales beat queensland by 4 wickets: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், நியூ சவுத் வேல்ஸ்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குயின்லாந்தை வீழ்த்தியது.
பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், குயிஸ்ன்லாந்து நிர்ணயித்த 359 ஓட்டங்கள் இலக்கினை 49 ஓவர்களில் எட்டியது.
ஹூக் வெய்கென்
குயிஸ்ன்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ்ஸ் அணிகளுக்கு இடையிலான அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.
முதலில் ஆடிய குயின்ஸ்லாந்து அணியில் ஜேக் கிளேடன் 80 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹூக் வெய்கென் (Hugh Weibgen) 78 பந்துகளில் சதம் விளாசினார்.
அடுத்து வந்த அணித்தலைவர் மர்னஸ் லபுசாக்னேவும் அதிரடியில் மிரட்ட, அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
குயின்ஸ்லாந்து அணி 224 ஓட்டங்களை எட்டியபோது, ஹூக் வெய்கென் 89 பந்துகளில் 125 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
நியூ சவுத் வேல்ஸ் வெற்றி
லபுசாக்னே 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாச, ஹூகோ 24 ஓட்டங்கள் எடுத்தார்.
குயின்ஸ்லாந்து அணி 50 ஓவர்களில் 358 ஓட்டங்கள் குவித்தது. பென் ட்வர்ஷுய்ஸ், சீன அபோட் தலா 3 விக்கெட்டுகளும், சார்லஸ் ஸ்டோபோ 2 விக்கெட்டுகளும், தன்வீர் சங்கா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய நியூ சவுத் வேல்ஸ் அணியில் கர்டிஸ் பேட்டர்ஸன் 63 ஓட்டங்களும், ரிலே கிங்செல் 79 ஓட்டங்களும் விளாசினர்.
வில்லயம் சால்ஸ்மன் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களும், ஜேக் ஸ்கோட் 52 ஓட்டங்களும் விளாச, நியூ சவுத் வேல்ஸ் அணி 49 ஓவர்களில் 359 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
