வளர்ந்து வரும் மனித மூளை., ஆராய்ச்சியாளர்களின் வியப்பூட்டும் தகவல்கள்
மனித மூளையின் அளவு அதிகரித்து வருவது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழக டேவிஸ் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளை பற்றிய ஆய்வின் விவரங்கள் ஜமா நியூராலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, 1970களில் பிறந்தவர்களின் மூளை அளவு 1930களில் பிறந்தவர்களை விட 6.6 சதவீதம் பாரியதாக இருக்கிறது.
1999 முதல் 2019 வரை, 3,226 பேரின் மூளையை MRI எடுத்து ஆய்வு செய்தது
1930களில் பிறந்தவர்களின் சராசரி மூளை அளவு 1,234 மில்லிலிட்டர் என்றும், 1970களில் பிறந்தவர்களின் மூளை 1,321 மில்லிலிட்டர் என்றும் கண்டறியப்பட்டது.
மூளையின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் White Matter, Grey Matter மற்றும் hippocampus ஆகியவற்றின் அளவும் அதிகரித்தது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், மூளையின் அளவு அதிகரிப்பதால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக வயதானவர்களுக்கு மறதி, மறதி நோய் ஏற்படும் அபாயம் குறையும் என்கின்றனர்.
அதே சமயம், மூளையின் அளவு அதிகரிப்பதால், மூளை நன்கு வளர்ச்சியடைந்து, மனநலம் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |