சுவிஸ் நதியில் கிடைத்த பைகள்... அதிர்ச்சியை உருவாக்கிய காட்சி
Human remains found in Rhine river in Switzerland: சுவிட்சர்லாந்தில், ரைன் நதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில், Stein என்னுமிடத்தில், ரைன் நதியோரம் சென்றுகொண்டிருந்த சிலர், நதியில் பிளாஸ்டிக் பை ஒன்று மிதப்பதைக் கண்டுள்ளார்கள்.
அதிர்ச்சியை உருவாக்கிய காட்சி
அவர்கள் அந்தப் பையை எடுத்து அதற்குள் என்ன இருக்கிறது என பார்க்க, அதற்குள் ஒரு மனிதக் கால் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

பொலிசாருக்குத் தகவலளிக்கப்பட, ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் நதியில் இறங்கித் தேட, மேலும் சில பிளாஸ்டிக் பைகள் கிடைத்துள்ளன.
அவற்றிற்குள்ளும் மனித உடல் பாகங்கள் இருக்கவே, அந்த உடல் யாருடையது என கண்டுபிடிக்கும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அந்த உடல் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருடையதாக இருக்கலாம் என பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.