அகதிகள் விடயத்தில் மனித உரிமை மீறல்: சுவிட்சர்லாந்து மீது குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்து, அகதிகள் விடயத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் விமர்சனம் முன்வைத்துள்ளது.
மனித உரிமைகள் ஐரோப்பிய ஒப்பந்த மீறல்
சுவிட்சர்லாந்து, மனித உரிமைகள் தொடர்பிலான ஐரோப்பிய ஒப்பந்தத்தின் 8ஆவது பிரிவை மீறியுள்ளதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.
விடயம் என்னவென்றால், மூன்று எரித்ரியர்கள் மற்றும் ஒரு திபெத் வம்சாவளியினரான சீனர் ஆகியோர், 2008க்கும் 2012க்கும் இடையில் சுவிட்சர்லாந்து வந்துள்ளார்கள், அவர்களுக்கு அகதி நிலை வழங்கப்பட்டுள்ளது.
அரசு உதவியால் வந்த பிரச்சினை
அவர்கள் அரசின் நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள். ஆனால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அரசு உதவி பெறுவோர், தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துக்கொள்ளமுடியாது.
ஆகவே, இந்த நான்கு அகதிகளுக்கும் தங்கள் குடும்பத்தினருடன் இணைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நான்கு பேரில் இருவர் பணிபுரிந்து வருவதையும், ஒருவர் பணி செய்யும் நிலையில் இல்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட நிதிமன்றம், ஒருபுறம், இந்த அகதிகள் தங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைவதில் காட்டும் ஆர்வம், மறுபுறம், நாட்டின் பொருளாதார நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆர்வம் என இரு விடயங்களுக்கும் இடையில் சுவிஸ் அதிகாரிகள் நியாயமான சமநிலையைப் பின்பற்றவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |