இந்திய புலம்பெயர்ந்தோரை ரகசியமாக பிரித்தானியாவுக்குள் கடந்த முயன்ற இருவர்
மோசமாக பேணப்படும் ஒரு வாகனத்துக்குள் இந்திய புலம்பெயர்ந்தோரை ரகசியமாக பிரித்தானியாவுக்குள் கடத்த முயன்ற இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் படையால் கைது
குறித்த வாகனத்தில் அழுக்கு டயர்களின் பெரிய குவியல்களுக்கு மத்தியில் நால்வர் ஒளிந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிக்கிய Shafaz Khan மற்றும் Choudhry Rashied ஆகிய இருவரும் குறித்த வாகனத்துடன் நியூஹேவன் படகு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டபோது எல்லைப் படையால் கைது செய்யப்பட்டனர்.
அந்த இரு பிரித்தானிய பிரஜைகளும் பெல்ஜியத்திலிருந்து பிரித்தானியாவிற்கு பயணித்ததாகக் கூறினர். இந்த நிலையில், விசாரணை முடிவடைந்து ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவருக்கும் மொத்தம் 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு, ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் குற்றச் செயல்களை மறைக்க எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் Dame Angela Eagle தெரிவித்துள்ளார்.
விசாரணையில் கண்டறியப்பட்டது
மேலும், இந்த கடத்தல்காரர்கள் தனிநபர்களின் ஒரு குழுவை பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான சூழ்நிலையில் தங்கள் சொந்த நிதி ஆதாயத்திற்காக சுரண்டினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தண்டனை பெற்றுள்ள இருவரும் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களை கடத்துவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வேனை வாடகைக்கு எடுத்தது உள்விவகார அமைச்சின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
கடந்த 2019ல் நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய அந்த இந்திய புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தகவலேதும் தற்போது வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |