பிரித்தானியாவின் பணக்கார குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு: யாரும் சிறை செல்லவில்லை என விளக்கம்
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்று என கருதப்படும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது, பலரும் அறிந்ததே.
ஆனால், அந்த வழக்கு தொடர்பில் முரண்பட்ட செய்திகள் வெளியாகிவருகின்றன.
பிரித்தானியாவின் பணக்கார குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான ஹிந்துஜா குடும்பம், பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இந்தக் குழுமத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
ஹிந்துஜா குடும்பத்தின் உறுப்பினர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோருக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்குமாறு சட்டத்தரணிகள் இப்போது கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
அத்துடன், நீதிமன்ற செலவுகளுக்காக ஹிந்துஜா குடும்பம் 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 3.5 மில்லியன் பிராங்குகள் இழப்பீட்டு வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்கள்.
சிறைத்தண்டனை என வெளியான தகவல்
இந்நிலையில், ஹிந்துஜா குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமலுக்கு நான்கரையாண்டுகளும், தம்பதியரின் மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு நன்கு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
யாரும் சிறை செல்லவில்லை என விளக்கம்
ஆனால், ஹிந்துஜா முடும்ப செய்தித்தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஹிந்துஜா குடும்பத்தினர் துஷ்பிரயோகம் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் சிறை செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் எந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |