பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை

United Kingdom South Korea
By Balamanuvelan May 31, 2024 08:50 AM GMT
Report

வடகொரியா, பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்குள் மனிதக்கழிவுகளைக் கொண்டு இறக்கிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காற்றில் பரவும் மனிதக்கழிவுகளால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறித்து எச்சரித்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.

தென்கொரியாவில் வந்திறங்கிய 260 ராட்சத பலூன்கள்

வடகொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட பலூன்களுடன், மலம் மற்றும் குப்பை அடங்கிய 260 மூட்டைகள் தென்கொரியாவில் வந்திறங்கியுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.

பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை | Human Waste Land In Balloon Uk Doctors Warns

Image: YTN

பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்நிலையில், பிரித்தானியாவில் அதேபோல பலூன்களில் மனிதக்கழிவுகள் வந்து இறங்கினால் என்ன ஆகும்? அதனால் என்னென்ன நோய்கள் பரவக்குடும் என்பது குறித்து எச்சரித்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.

பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை | Human Waste Land In Balloon Uk Doctors Warns

Image: YTN

பொதுவாக, மனிதக்கழிவிலிருந்து காற்றில் பரவும் கிருமிகள் குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை என்று கூறும் மருத்துவர் Dr. Lawrence Cunningham, வயிற்றுப் பிரச்சினை உருவாகி, சத்தமாக மலம் வெளியேறுவதை வேடிக்கையான விடயமாகத்தான் பலரும் பேசுகிறார்கள், ஆனால், அது சீரியஸான விடயம் என்கிறார்.

அப்படி, வேகமாக வெளியேரும் மலத்திலிருந்து பாக்டீரியா, வைரஸ் மற்றும் பாரசைட் வகை கிருமிகள் பரவலாம் என்கிறார் அவர். குறிப்பாக, இப்படி காற்றில் பரவும் நோராவைரஸ் என்னும் கிருமிகள் தொற்றாகப் பரவுவதைக் குறித்து நான் அறிந்திருக்கிறேன் என்கிறார் Dr. Lawrence Cunningham.

பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை | Human Waste Land In Balloon Uk Doctors Warns

Image: Getty Images/iStockphoto

என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?

இப்படி கழிவறையிலிருந்து பரவும் கிருமிகளைத் தடுப்பதற்காக, கழிவறைகளில், காற்று வெளியேறுவதற்கான ஜன்னல்கள் அமைப்பதும், அவற்றை திறந்துவைப்பதும் அவசியம் என்கிறார் அவர்.

பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை | Human Waste Land In Balloon Uk Doctors Warns

Image: Getty Images/iStockphoto

அத்துடன், கழிவறைகளை அவ்வப்போது கிருமிநீக்கம் செய்வதும், சுத்தம் செய்வதும் அவசியம் என்று கூறும் Dr. Lawrence Cunningham, மனிதக்கழிவுகள் நம் மீது பட்டுவிட்டால், நம் உடைகளை சுத்தமாகத் துவைப்பதும், வழக்கமான குளியலைவிட அதிக கவனத்துடன் சோப் பயன்படுத்தி உடலை சுத்தம் செய்வதும் அவசியம் என்கிறார். ஏனென்றால், சுத்தம் செய்யப்படாத கைகள் மூலம், இந்தக் கிருமிகள் நமது கண்கள், மற்றும் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்து வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்கிறார் அவர்.

பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை | Human Waste Land In Balloon Uk Doctors Warns

Image: YONHAP/EPA-EFE/REX/Shutterstock

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US