பிரம்மனின் படைப்பில் கனடா செந்தில் குமரன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காதா?
கனடாவை சேர்ந்த செந்தில் குமரனின் அளப்பெரிய சேவையானது, வாழ்வாதாரங்களையும் இழந்து இருதய நோயினால் உயிருக்கு போராடும் எம்மக்களை, இருதய சிகிச்சை செய்வதன் மூலம் உயிர்காக்கும் ஒரு மா மனிதனாக திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை.
இதனை Akathiyan Tholkapiyan என்ற ஒரு முகப்புத்தக கவிஞர் மேற்கண்டவாறு எழுதி அவரது மகத்தான சேவையினை செய்வதற்கு ஆர்வமூட்டச்செய்கிறார்.
"இவ்வாறான ஆத்மார்த்த விடயங்களுக்கு லைக்குகளோ பின்னூட்டங்களோ இட்டு ஊக்கமளிப்போர் தொகை குதிரைக் கொம்பாக இருப்பது கவலைக்குரிய ஒரு வழமையாக இருபினும் , இச்செய்தி மனித நேயம் சார்ந்ததாக இருப்பதனால் அவற்றையும் கடந்து மக்கள் கவனத்திற்கு எடுத்து வரப்படுகின்றது என்பதனை முதலில் இங்கு தெரிவித்து விடலாம்.
மின்னலே , நிவாரணம் புகழ்
மனிதநேயச் சிகரம்
திரு . செந்தில்குமரன்.
எனக்குத் தெரிய , இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக பொதுப் பணிகளில் அதுவும் " உயிருக்காகப் போராடும் பொருளாத வசதி கிஞ்சித்தும் அற்ற எமது தாயக மக்களின் மறு பிறவி தருவதற்கான மனித நேயப்பணிகளில் " தனது குடும்ப வாழ்வையும் கடந்து தன்னை ஆழ ஆட்படுத்தி பூமிப் பரப்பெங்கனும் ஓடோடி தனது பல் கலை வித்துவங்களின் மூலம் அயராது உழைத்து பல உயிர்களைக் காத்து புது வாழ்வு தருவித்து வரும் "வானைப் போல்" விசாலித்த மனித நேய இதயம் படைத்த எனது பெரு மதிப்பிற்குரிய திரு . செந்தில் குமரன் அவர்களுக்கு மனித நேய வாஞ்சை கொண்ட ஈழத்தமிழினத்தின் சார்பாக தலை சாய்த்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்ம்புகிறேன்.
விரும்பியவர்கள் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்
இன்னும் பல உயிர்களை காக்க விரும்பியவர்கள் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்
மேலும் , ஒரு பொது மக்கள் செயற் பட்டாளர் என்பவர் தனி நபரோ அன்றி நிறுவனங்களோ அவைதம் நம்பகத் தன்மையை உளத் தூய்மையுடன் பேணுதல் ஒன்றே அந்த செயற்பாட்டுத் தளத்தின் ஆணிவேராக ஆன்மாவாக நின்று மனிதத்தை மலர்விக்கும் பெரு விருட்சமாக செழித்தோங்கி பயன் தரும் வல்லமையினைப் பெற வல்லது என்பது அறிவு.
அந்த வகையில் , திரு . செந்தில் குமரன் அவர்கள் மேற் கொள்ளும் உயிர் காப்பு செயற்பாடுகள் தொடர்பான , நிதி வழங்குவோர் தொட்டு , அவரது மருத்துவர் குழாம் , நிதி பெறுதல் தொடர்பாக தொண்டர்களாக சேர்ந்தியங்கும் பாடகர் மற்றும் இசைக் கலைஞர்கள் , நிதி பெறுதலுக்காக தொழில் நுட்ப மற்றும் இன்ன பிற துறை சார் வல்லுனர்களின் ஒத்துழைப்பு வரை , அனைத்து விடயங்களும் , பங்களிப்புச் செய்தோர் பெயர்கள் தொலை பேசி எண்கள் மற்றும் வரவு செலவு அடங்கலான அத்தனை தரவுகளும் மிகத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் வெளிப்டையாகவும் பட்டியலிடப்பட்டு மக்கள் பார்வைக்காக பொதுத் தளங்களில் பதிவேற்றி தனது அதி உச்ச உளத்தூய்மையை ஏனையோருக்கும் ஒரு முன்னுதாரணமாக வெளிப்படுத்தும் தன்மைக்கு பங்களிப்பாளரும் பயன் பெறுவோரும் தலை வணங்குவர் என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம்.
இன்றைய இக் covid19 தொற்று முடக்க நிலையிலும் கூட உயிர் காப்பு் பணிகளை நிறுத்தி வைத்து ஒதுங்கி விடாது வழமையான தனது செயற்பாடுகளை சற்றும் பிசகாது மெய் நிகர் ( zoom ) வழியான உள்ளரங்க கலை நிகழ்ச்சிகள் மூலம் தளர்வின்றி பல்துறையினரையும் ஒன்று திரட்டி உழைத்து பல நோயாளரின் சத்திர சிகிச்சைகளுக்கு உதவிக்கரமாக இருந்து அக்குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்திருக்கின்றார் என்பது எத்தனை ஆத்மார்த்தமானது என்பதனை நாம் அனைவரும் ஒருகணம் எண்ணி.பார்த்திடலாம்.
அத்த வகையில் இவர் மட்டுமல்லாது இவர் போலவே வெளிப்படைத் தன்மையுடன் துன்பத்தில் ஆழ்ந்தோரைத் தூக்கி வாழ்வு தரும் நல்லெண்ணம் படைத்த செயற்பாட்டாளர் எவராயினும் அடையாளம் கண்டு மதிப்பளிக்கப் படல் வேண்டும் என்பது மனித உணர்வு படைத்த அனைவரது கடனாகும் என்பது வெளிச்சம்.
ஏதோ நமக்குக் கிடைத்த வாழ்வை நாம் மட்டும் நமக்கென்றே இன்புற்று வாழ்ந்து விட்டுப் போகலாமே என்றில்லாமல் , கதியற்றுக் கலங்குவோரையாம் கை கொடுத்து கரை சேர்க்க விளையும் இவ்வாறான மனிதத் தொண்டர்கள் எவராயினும் ஊக்குவிக்கப் படல் வேண்டும் என்பதனை இத்தால் பணிவன்புடன் வேண்டிக் கொள்ளலாம்.
வாழ்க செந்தில் குமரன்கள் , வளர்க அவர் தம் மனித நேயம்...!
கீழே அவர் பணிகள் தொடர்பாக பங்களித்தோர் விபரக் கோர்வைப் பட்டியல்களின் பதிவுகளை ஆர்வமுள்ளோர் பார்வையிடலாம் !"