அவமானப்பட்டேன்... உக்ரைன் அழகிக்காக கைவிட்ட கணவன் குறித்து பிரித்தானிய பெண் வெளிப்படை
உக்ரேனிய அகதிக்காக தமது கணவர் தம்மை கைவிட்டு சென்றது அவமானகரமான செயல் என உணர்ந்ததாக பிரித்தானிய பெண்மணி தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 28 வயது லோர்னா கார்னெட், தனது முன்னாள் கணவரான 29 வயது டோனி கார்னெட்டுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை வென்றுள்ளார்.
லோர்னாவுக்கு எதிராக அருவருப்பான தகவல்களை ஒரு வாரமாக டோனி வெளியிட்டு வந்த நிலையிலேயே தடை உத்தரவை அவர் பெற்றுள்ளார்.
உக்ரேனிய அகதியான 22 வயது சோபியா என்பவருடன் புதிய வீட்டில் குடிபெயர்ந்த நிலையில், இன்னொரு உக்ரைன் பெண் மற்றும் அவரது காதலருக்கு தமது குடியிருப்பில் அடைக்கலம் அளித்துள்ளார் டோனி கார்னெட்.
உக்ரைனிய இளம் பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தமது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் லோர்னா. இப்படியான ஒரு கொடுமை தமது வாழ்க்கையில் நடந்துவிடும் என ஒருபோதும் எண்ணியதில்லை என லோர்னா குறிப்பிட்டுள்ளார்.
டோனியின் இந்த நடவடிக்கை தம்மை அவமானப்படுத்தியதாக கூறும் லோர்னா, உண்மையான காரணம் என்ன என்பது தமக்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எட்டு வருடங்கள் ஒன்றாகச் சேர்ந்து குடும்பம் நடத்திய பிறகு, எனக்கு அவரைத் தெரியும் என்று நினைத்தேன், ஆனால் நான் ஏமாந்துவிட்டேன். நான் இப்போது விரும்புவது எல்லாம் எனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் எனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே என லோர்னா தெரிவித்துள்ளார்.
அவரது பிள்ளைகளை சந்திக்க நான் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை, ஆனால் அவதூறு பரப்ப நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை, அதனாலையே தடை உத்தரவை வென்றுள்ளேன் என லோர்னா குறிப்பிட்டுள்ளார்.