சுவிஸ் நகரமொன்றில் கோவிட்-19 நடவடிக்கைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்; எதிராக கிளம்பிய மற்றோரு குழு!
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் சனிக்கிழமையன்று, அரசாங்கத்தின் கோவிட்-19 நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.
சுவிஸ் அரசாங்கத்தின் தொற்றுநோய் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் "சுதந்திரம்" (Freedom) என்று கோஷமிட்டபடி, கோவிட் சான்றிதழைப் பயன்படுத்துவதற்கான சட்ட நிபந்தனைகளை அமைக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து பேரணி நடத்தினர்.
நாடு முழுவதும் இந்த வாக்கெடுப்புக்கான முடிவுகள் வரும் நவம்பர் 28-ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
சனிக்கிழமையன்று பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி வளைத்தனர், ஆனால் பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு ஊர்வலம் காவல்துறையினருடன் நகர மையத்தை நோக்கி நகர்ந்தது.
Picture; Keystone / Ennio Leanza
அப்போது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்-ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் (Counterdemonstrators) ஒன்றுகூடி, சைக்கிளில் இரயில் நிலையத்தை பலமுறை சுற்றி வந்தனர். அவர்கள் வைத்திருந்த துண்டு பிரசுரங்களின்படி, அரசாங்க நடவடிக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை நகரத்திற்கு உள்ளே அனுமதிக்க விடாமல் தடுக்க விரும்பினர்.
ஆனால் இதில் எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகாரிகளிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.
இரு குழுக்களும் சூரிச்சின் முக்கிய ரயில் நிலையத்தில் சந்தித்தனர், ஆனால் நிலைமை அமைதியாக இருந்தது. ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தடுப்புகள் கொண்ட வாகனங்கள் ஸ்டேஷன் மாடலுக்கான அணுகலை ஓரளவு தடுத்து நிறுத்தி தண்ணீர் பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.