நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்: கடத்தல் மன்னன் ஒருவனும் கைது
கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்
ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, சமீபத்தில் 629 சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை இரண்டு விமானங்கள் மூலம் நாடுகடத்தியுள்ளது.
அதனால், லேபர் அரசு பொறுப்பேற்றபின் நாடுகடத்தப்பட்ட சட்ட விரோத புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 9,400 ஆகியுள்ளது.
அதுமட்டுமின்றில், இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு சில விமானங்கள் புறப்பட உள்ளன.
Image: Getty Images
அவை, இதுவரை பிரித்தானியா சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தாத நாடுகளுக்கு பயணிக்க உள்ளன.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், Engine King என அழைக்கப்படும் துருக்கி நாட்டவரான ஒருவர் கடந்த புதன்கிழமை ஆம்ஸ்டர்டாமில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காரணம், அந்த நபர், புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைய உதவும் ஆட்கடத்தல்காரர்களுக்கு, நூற்றுக்கணக்கான படகுகளுக்கான மோட்டார்களை சப்ளை செய்தவர் ஆவார். அவர் விசாரணைக்காக தற்போது பெல்ஜியம் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |