பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மாயம்: கண்டுபிடிக்கவும் வழியில்லை...
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த நான்கு மாதங்களில் மாயமாகியுள்ளார்கள்.
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர், எல்லை பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பானவை என கருதப்படும் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் மாயமாகியுள்ளார்கள்.
கடந்த நான்கு மாதங்களில் 227 புலம்பெயர்ந்தோர் மாயமாகியுள்ளார்கள். கூடுதல் பிரச்சினை என்னவென்றால், கைரேகைகள் முதலான அடையாளங்கள் பதிவு செய்யப்படும் முன்பே சுமார் 38 பேர் மாயமாகியுள்ளார்கள். அதாவது, கைரேகை முதலான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.
Credit: PA
விடயம் என்னவென்றால், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவருமே முறைப்படி புகலிடம் கோருவார்கள் என எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக நம்பி விடுவதால், அவர்களை கவனமாக கண்காணிப்பதில்லை என்கிறார் எல்லைகள் மற்றும் புலம்பெயர்தல் முதன்மை ஆய்வாளரான David Neal.
இப்படி கைரேகை முதலான அடையாளங்களைக் கூட பதிவு செய்யாமல் மாயமான புலம்பெயர்ந்தோரால் பாதுகாப்புக்கு பயங்கரமான அபாயம் ஏற்படும் என்கிறார் அவர்.
நாட்டுக்குள் நுழைபவர்கள் குறித்து நம்மிடம் ஆவணங்கள் இல்லை என்றால், அச்சுறுத்துவது யார், அச்சுறுத்தப்படுவது யார் என்பதே தெரியாமல் போய்விடும் என்கிறார் David.