பிரித்தானியாவிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மாயம்! பதட்டத்தில் அரசாங்கம்: கசிந்த முக்கிய தகவல்
பிரித்தானியாவிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் படகு மூலம் நுழைந்த மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஏற்கனவே 10,500-ஐ கடந்துவிட்டது.
இது 2020 முழுவதும் வந்த 8,417 புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை விட 2,000 அதிகம்.
பிரித்தானயாவிற்குள் நுழையும் புலம்பெயரந்தோர் செயல்முறைக்கு உட்படுத்துவதற்கு முன் 10 நாட்கள் பத்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், சிறிய படகுகளில் இங்கிலீஷ் சேனலைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் ஹோட்டல்களில் இருந்து தப்பியோடிய பின்னர் காணாமல் போயுள்ளனர் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கண்காணிப்பு அமைப்புகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் அரசாங்க அமைச்சர்கள் அவசர கலந்துரையாடல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து அரசாங்க வட்டாரம் கூறியதாவது, புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் இங்கு வருகிறார்கள், அவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்பது குறித்து அரசாங்கத்தில் குழப்பம் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் பதட்டமடைந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.