இனி கஷ்டம் தான்! சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான பிரித்தானியர்களின் நிலை குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்ட வெளியுறவு செயலாளர்
ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் இனி பிரித்தானியாவுக்கு வருவது கஷ்டம் தான் என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ஒப்புக்கொண்டார்.
காபூல் விமான நிலையத்தை விட்டு பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் புறப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான பிரித்தானியா குடிமக்கள் இருக்கின்றனர் என ராப் கூறினார்.
அவர்கள் பெரிய குடும்பக் குழுக்கள் அல்லது ஆவணங்கள் இல்லாதவர்கள் போன்றவர்கள்.
இவர்களை தவிர்த்து, பிரித்தானியா அரசாங்கத்துடன் அல்லது மீள்குடியேற்றத் திட்டத்தின் மூலம் பணியாற்றியவர்கள் சிலரும் பிரித்தானியாவுக்கு செல்ல முடியும் என நம்புகிறார்கள்.
தகுதியுள்ள அனைவரையும் வெளியேற்ற முடியும் என பிரித்தானியா அரசாங்கம் நம்புகிறது, மூன்றாவது நாடுகள் வழியாக அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வர பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
மக்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் உளித்த உத்தரவாதங்களை தொடர்ந்து போராளி குழு கடைப்பிடிக்க வேண்டும் என பிரித்தானியா அரசு உறுதிசெய்யப்போவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறினார்.