கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்: இந்திய அரசு சொல்வதென்ன?
கனடாவிலிருந்து நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்திலிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அந்த விடயம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்
கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.
இப்படி திடீரென புலம்பெயர்தல் விதிகளை மாற்றி, தங்களுக்கு பணி அனுமதிகள் தர மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர்கள் பலர் கனடாவில் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்திய அரசு சொல்வதென்ன?
ஆனால், இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளதாக கூறப்படுவது குறித்து தங்களுக்கு புகார்களோ தகவல்களோ வரவில்லை என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்பதற்காக கனடா சென்றுள்ளார்கள். ஆனால், ஏராளம் மாணவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கூறப்படுவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான Randhir Jaiswal, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் பிரச்சினைகள் எதிர்கொள்ளக்கூடுமேயொழிய, கனடாவிலிருக்கும் இந்திய மாணவர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு பெரிய பிரச்சினை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |