லண்டன் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: வெளியான புகைப்படங்கள்
லண்டன் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலகட்டத்திற்கு முன் சாலைகள் எப்படி நெரிசல் மிக்கவையாக இருந்தனவோ கிட்டத்தட்ட அதே அளவு கூட்ட நெரிசலை இன்று லண்டன் சாலைகளில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் காண முடிந்தது.
இந்த போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் என்னவென்றால், வீடுகளிலிருந்த வண்ணம் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்த மக்கள், 18 மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் அலுவலகங்களுக்குப் பணிக்குத் திரும்புவதுதான்!
சாலைகள் மட்டுமின்றி, இன்று லண்டன் நோக்கிச் செல்லும் ரயில்களிலும் கூட்டம் அதிகரித்ததால், பல இரயில்கள் தாமதமாக இயங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.