லண்டனில் அலறி ஓடிய மக்கள்! பூங்காவில் விரட்டி விரட்டி குத்தப்பட்ட இளைஞன்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Police London
By Kaviarasan Jun 05, 2021 04:30 AM GMT
Report

 லண்டனில் இருக்கு பூங்கா ஒன்றில் இளைஞன் ஒருவர் மர்ம கும்பலால் குத்தப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் பிரபல பூங்காவான Hyde-ல் கடந்த 1-ஆம் திகதி 17 வயது இளைஞன் ஒருவனே இந்த கத்தி குத்து தாக்குதலால் காயமடைந்துள்ளான்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் பூங்காவில் கூடியிருந்த வேளையில், மர்மநபர்கள் சிலர் அந்த 17 வயது இளைஞனை கத்தியால் குத்துவதற்கு விரட்டுகின்றனர்.


இதனால் அங்கிருந்த மக்கள் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

கத்திகுத்தால் காயமடைந்து கிடந்த அந்த 17 வயது இளைஞனை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமான நபர்களை தேடி வருகின்றனர்.

இது ஒரு வெட்ககேடான செயல், வரவிருக்கும் நாட்களில் இங்கு பொலிஸ் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். அதுமட்டுமின்றி இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை யாரேனும் கண்டிருந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறப்பட்டுள்ளது.

லண்டனில் அலறி ஓடிய மக்கள்! பூங்காவில் விரட்டி விரட்டி குத்தப்பட்ட  இளைஞன்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி | Hunt For Gang With Machetes After Man London

இந்த சம்பவம் குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் Alex Bingley கூறுகையில், மக்கள் பலர் கூடியிருக்கும் பொது இடத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனி வரும் நாட்களில் இந்த பூங்காவில் பொலிசார் பாதுகாப்பிற்கு இருப்பார்கள் என்பதை உறுதிபடுத்தி கொள்கிறேன். பூங்கா என்பது அனைவரும் ரசித்து பார்க்க வரும் ஒரு பாதுகாப்பான இடம் ஆகும், ஆனால் இது போன்ற சம்பவத்திற்கு காரணமான நபர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கூறியுள்ளார்.

லண்டனில் அலறி ஓடிய மக்கள்! பூங்காவில் விரட்டி விரட்டி குத்தப்பட்ட  இளைஞன்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி | Hunt For Gang With Machetes After Man London

மேலும், இந்த சம்பவத்தின் போது, அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அதில் பாதிப்புக்குள்ளான நபர் கத்தியுடன் அந்த மர்ம கும்பலுடன் சண்டை போடுகிறார்.

அதன் பின் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு ஓடும் போது, அந்த கும்பல் அவரை விரட்டி விரட்டி குத்துகிறது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க, பொலிசார் உடனடியாக வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். தற்போது அந்த இளைஞனின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US