நிர்வாணமாக காணொளி... பெண் உதவியாளரை மிரட்டிய ஜனாதிபதி பைடனின் மகன்
நிர்வாணமாக குளிக்கும் காணொளியை பகிராமல் போனால் ஊதியத்தை தடுத்து வைப்பதாக பெண் உதவியாளரை ஹண்டர் பைடன் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனின் மகன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 52 வயது மகன் ஹண்டர் பைடன் அனுப்பிய குறுந்தகவளில் தொடர்புடைய சம்பவம் அம்பலமாகியுள்ளது. நிர்வாணமாக குளிக்கும் காணொளியை பகிர்ந்தால் மட்டுமே ஊதியம் வழங்க முடியும் எனவும் ஹண்டர் பைடன் மிரட்டியுள்ளார்.
@getty
ஹண்டர் பைடனுக்கு சொந்தமாக மடிக்கணியில் பதிவாகியுள்ள தகவல்களே சமீப மாதங்களாக தலைப்புச் செய்தியாக மாறி வருகிறது. குறித்த மடிக்கணியில் ஹண்டர் பைடன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் சேமித்து வைத்திருந்ததாக கூறுகின்றனர்.
2018 ஜூன் மாதம் தொடர்புடைய பெண்ணை ஹண்டர் பைடன் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து வாஷிங்டனுக்கு அழைத்து வந்ததாகவும் தகவல் வெளியானது. தற்போது 33 வயதாகும் அந்த பெண், ஹண்டர் பைடனின் சட்ட நிறுவனமான Owasco-ல் 2018 முதல் 2019 வரையில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
2019 ஜனவரி மாதம் ஏன் ஊதியம் வழங்கவில்லை என்பதை ஹண்டர் பைடனின் செயலாளரிடம் குறித்த பெண் மின்னஞ்சல் மூலமாக வினவியுள்ளார். ஆனால், பதிவாகியுள்ள தகவலில், மார்ச் மாதம் அவருக்கு 500 டொலர் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிலுக்கு நிர்வாண காணொளி
ஆனால் வாடகை செலுத்த முடியாமல் அவதிப்படுவதாக அவர் குறிப்பிட, ஹண்டர் பைடன் அதற்கு நிர்வாண காணொளி ஒன்றை பதிலுக்கு கோரியுள்ளார். மட்டுமின்றி, மொத்தம் 2700 டொலர் தொகையை அந்த உதவியாளருக்கு ஹண்டர் பைடன் செலுத்தியுள்ளதுடன், குளியல் காட்சிகளுக்கும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
@AP
மேலும், 2018ல் குறித்த பெண்மணியுடன் அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து, தமது மடிக்கணினியில் ஹண்டர் பைடன் சேமித்து வைத்துள்ளார். தொடர்புடைய மடிக்கணினியில் இருந்து குற்றவியல் கோப்புகள் பல பிரபல பத்திரிகையில் வெளிவர, 2020 ல் இருந்து ஹண்டர் பைடன் எஃப்.பி.ஐ விசாரணையில் இருந்து வருகிறார்.
மட்டுமின்றி, அந்த மடிக்கணினியில் கணக்கிலடங்காத மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் ஹண்டர் பைடனுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையேயான தரவுகள், உக்ரைன், சீனா நிறுவனங்களுடனான வர்த்தக, தொழில் ஆவணங்கள் என சேமிக்கப்பட்டுள்ளது.