இரண்டு காதலிகள்... மூன்று காதலர்கள்: கொல்லப்பட்ட ஒரு காதலர்: கொலை செய்தது யார்? கனடாவில் சினிமாவை மிஞ்சிய ஒரு காதல் கதை
கனடாவில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கு ஒன்றின் பின்னணியில், சினிமாவை மிஞ்சிய ஒரு காதல் கதை உள்ளதால், விசாரணைக்குப் பின்பும் நீதிபதியே மீண்டும் தனியாக ஒரு விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
ஆல்பர்ட்டாவிலுள்ள கால்கரிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள Airdrie என்ற நகரில், Kalix Langenau (19)என்ற இளைஞர் பனியில் முகங்குப்புற இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தலையில் சுடப்பட்டிருந்தார். Hunter Van Mackelberg (19) என்ற இளைஞர் மீது, Kalixஐக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஒரு இடியாப்பச் சிக்கல் வழக்காக உள்ளது. அதாவது, Hunter என்பவர் Sadie Boyle என்ற பெண்ணைக் காதலித்திருக்கிறார். Kalix, Madeline Kot என்ற பெண்ணைக் காதலித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜோடிகள் பிரிந்துவிட்டிருக்கிறார்கள்...
பிறகு, Hunter, Madelineஐக் காதலிக்கத் தொடங்க, Kalixம் Sadieயும் இணைந்து வாழவே தொடங்கிவிட்டிருக்கிறார்கள். இதில் விடயம் என்னவென்றால், தங்கள் காதலிகள் மூலம்தான் Hunterக்கும் Kalixக்கும் ஒருவரையொருவர் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் Kalixஇன் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட, Hunterதான் அதைச் செய்ததாக Kalix நம்பி, பயந்து பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு தப்பிச் சென்று, அங்கு வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார்.
இதற்கிடையில் Kalix தன் இரண்டாவது காதலியான Sadieயையும் பிரிந்துவிட்டார். சரி, இரண்டு காதலிகளையும் பிரிந்தாயிற்று. முதல் காதலி Madeline, Hunterஉடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க, இரண்டாவது காதலி Sadieயும் Dylan என்ற நபரைக் காதலிக்கத் தொடங்கிவிட்டார்.
பேசாமல் இருக்காமல், மீண்டும் Hunterஉடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த தன் முதல் காதலியான Madelineக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் Kalix. இருவரும் ஓரிடத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு சந்தித்திருக்கிறார்கள். அப்போது Madelineஐப் பின் தொடர்ந்து வந்த Hunter, தன் காதலியுடன் இருந்த Kalixஐ சுட்டுக்கொன்றதாக அவர் மீது இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், நீதிபதி இந்தக் கதையை நம்பவில்லை...
காரணம், Kalixக்கும் அவரது இரண்டாவது காதலியான Sadieயை தற்போது காதலிக்கும் Dylanக்கும் இடையில் கூட, பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குத் தப்பிச் சென்ற Kalix, மீண்டும் கால்கரிக்குத் திரும்பும்போது, அவரது இரண்டாவது காதலி Sadieதான் அவரை விமான நிலையம் சென்று அழைத்து வந்திருக்கிறார். இதனால் அவரது காதலரான Dylan கோபம் அடைந்திருக்கிறார்.
ஒருவேளை அவர் கூட Kalixஐக் கொன்றிருக்கலாமே என்ற சந்தேகத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் எழுப்பியிருக்கிறார்.
ஆக, இப்போது நீதிபதியே மீண்டும் மூன்று வாரங்களுக்கு ஒரு விசாரணை நடத்தி, முடிவுக்கு வர இருக்கிறார்.