தினமும் ரூ.7,100 கோடி சம்பாதித்த 300 இந்திய குடும்பங்கள் - முதல் 10 இடத்தில் 2 தமிழ்நாடு குடும்பங்கள்
hurun india அமைப்பு 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் அம்பானி குடும்பம்
இதில், புதிதாக 100 குடும்ப வணிகங்கள் இணைந்து, 300 குடும்பங்களாக இந்த பட்டியல் விரிவடைந்துள்ளது.
இதன் மொத்த மதிப்பீடு ரூ. 134 லட்சம் கோடி ஆகும். அதாவது, கடந்த ஆண்டில் இந்த 300 குடும்பங்கள் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.7,100 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த பட்டியலில், ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானியின் குடும்பம் ரூ.28.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து 2வது ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 12% ஆகும்.
ரூ.6.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் குமார மங்கலம் பிர்லா குடும்பம் பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது. ரூ.5.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஜிண்டால் குடும்பம் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
2 தமிழ்நாடு குடும்பங்கள்
இந்த பட்டியலில், ரூ.4.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா குடும்பம், 6வது இடத்திலும், ரூ.2.92 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முருகப்பா குடும்பம் 7வது இடத்திலும் உள்ளது.
இந்த இரு குடும்பங்களும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட குடும்பங்கள் ஆகும்.
இந்த பட்டியலில், முதல் தலைமுறை நிறுவனத்தில், ரூ.14 லட்சம் கோடியுடன் அதானி குடும்பம் முதலிடத்திலும், 2.3 லட்சம் கோடியுடன் சீரம் இன்ஸ்டியூட்டின் பூனவல்லா குடும்பம் 2வது இடத்திலும் உள்ளது.
இந்த வணிகங்களில், 22 பெண்கள் தலைமையில் உள்ளது. இதில், 161 குடும்பங்கள் 1 பில்லியன் டொலருக்கு அதிகமான மதிப்புடையவை. இது கடந்த ஆண்டை விட 37 அதிகம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |