இந்தியாவில் 271 பில்லியனர்கள்! கொட்டி கிடக்கும் 1 டிரில்லியன் டொலர் செல்வம்: முதலிடத்தில் யார்?
இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
271 இந்திய பில்லியனர்கள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதன் செழித்து வரும் பில்லியனர் மக்கள் தொகை(billionaire population) பிரதிபலிக்கிறது.
ஹுருன் உலக பணக்காரர்கள் பட்டியல் 2024 இன் படி,(Hurun Global Rich List 2024) இந்தியா தற்போது 271 பில்லியனர்களை(271 billionaires) கொண்டுள்ளது.
இது இந்த ஆண்டு 94 புதிய பில்லியனர்களின்(Indian businesses) நுழைவுடன் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
இந்திய பில்லியனர்களின் ஒட்டுமொத்த செல்வம் 1 டிரில்லியன் டாலர் ($1 trillion) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனா தற்போது 814 பில்லியனர்களின் கொண்டு உலகின் அதிக பில்லியனர்களை கொண்ட நாடாக முதலிடத்தில் உள்ளது, சீனாவை தொடர்ந்து 800 பில்லியனர்களை கொண்டு அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி(Mukesh Ambani), தொடர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய நம்பர் 1 பணக்காரராகவும், ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் உலகளவில் 10 வது இடத்திலும் உள்ளார்.
அவரது செல்வத்தில் 40% அதிகரிப்பு இருந்தபோதிலும், அம்பானி கடந்த ஆண்டின் தரவரிசையில் இருந்து ஒரு இடம் தாழ்ந்துள்ளார்.
அவரது தற்போதைய மொத்த சொத்து மதிப்பு சுமார் $115 பில்லியன் டொலர் ஆகும்.
ஆசியாவின் பணக்கார நகரம்
அறிக்கையின் படி, ஆசியாவின் புதிய பில்லியனர் தலைநகராக பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி மும்பை(Mumbai) முடி சூடுகிறது.
இந்த நகரம் மட்டும் சுமார் 92 பில்லியனர்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் மொத்த தொகையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Asia's new billionaire capital Mumbai, India billionaires 271India surpasses China billionaires, Mumbai new billionaire capital Asia, Hurun Global Rich List 2024 India, Mukesh Ambani India's richest person, Indian economic growth, Wealth inequality in India, Rise of new Indian billionaires, Mumbai business boom, Mukesh Ambani net worth,