மிஸ் சுவிட்சர்லாந்து அழகிக்கு ஏற்பட்டுள்ள பயங்கர முடிவு
மிஸ் சுவிட்சர்லாந்து போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்று வரை வந்த இளம்பெண்ணொருவரை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்து அவரது உடலை கூறுபோட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துவிட்டார்.

மிஸ் சுவிட்சர்லாந்து அழகிக்கு ஏற்பட்டுள்ள பயங்கர முடிவு
மிஸ் சுவிட்சர்லாந்து போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்று வரை வந்தவர் கிறிஸ்டினா (Kristina Joksimovic, 38).

சுவிட்சர்லாந்தின் பேசல் மாகாணத்திலுள்ள Binningen என்னுமிடத்தில் தன் கணவரான தாமஸுடன் வாழ்ந்துவந்தார் கிறிஸ்டினா.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தன் மகள் வீட்டிலிருந்த துணி துவைக்கும் அறையில், ஒரு பிளாஸ்டிக் கவரிலிருந்து தலைமுடி தெரிவதைக் கவனித்த கிறிஸ்டினாவின் தந்தை, அது தன் மகளுடைய தலை என்பது தெரியவரவே நடுநடுங்கி, அதிர்ந்து, பொலிசாரை அழைத்துள்ளார்.

பொலிசார் வந்தபோது, மேலும் பல பயங்கர விடயங்கள் தெரியவந்தன. விசாரணையின்போது, கிறிஸ்டினாவின் உடல் கூறுபோடப்பட்டு மிக்ஸி ஜார் ஒன்றில் அரைக்கப்பட்டது தெரியவந்தது.
அவரது கருப்பை மட்டும் தனியாக, முழுமையாக ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது.
யூடியூப் பார்த்து தன் மனைவியின் உடலை நிதானமாக கூறுபோட்டுள்ளார் தாமஸ். பின்னர் மனைவியின் உடல் பாகங்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, ரசாயனம் ஒன்றில் போட்டு கரைத்துள்ளார் அவர்.
இந்நிலையில், தன் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் தாமஸ். அவர் மீது தற்போது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கான திகதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |