மனைவியிடம் நெருக்கமாக பழகிய நபர்... கணவன் தந்த கொடூர தண்டனை
பாகிஸ்தானில் மனைவியிடம் நெருக்கமாக பழகிய நபரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்று கணவன் மூக்கையும் காதையும் அறுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தில் அப்துல்கயாம் மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். இவரது மனைவி அதே பகுதியை சேர்ந்த முகம்மது அக்ரம் என்பவருடன் தவறான உறவு வைத்துள்ளார்.
அப்துல்கயாமுக்கு அவரது மனைவி முகம்மது அக்ரம் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகம் இருந்துள்ளது.
இதனால் முகம்மது அக்ரம் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அப்துல்கயாம் மற்றும் அவரது நண்பர்கள் அவரை வழிமறைத்து ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் அவரது மூக்கு, காது இரண்டையும் அறுத்து எறிந்து அப்பகுதியில் இருந்து தப்பித்துவிட்டனர். இச்சம்பவம் அறிந்த பொலிசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த முகம்மது அக்ரமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தலைமறைவாக இருந்த அப்துல்கயாம் மற்றும் அவரது நண்பர்களை பொலிசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.